ஹோம் /நியூஸ் /Chennai /

300 ஆண்டுகள் பழமையான தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

300 ஆண்டுகள் பழமையான தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் "புதிய அத்தியாயம்" பைபிள்

தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் "புதிய அத்தியாயம்" பைபிள்

தஞ்சாவூரில் காணாமல் போன விலைமதிப்பு மிக்க தமிழின் முதல் பைபிள் லண்டனுக்கு சென்றது எப்படி? சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவர் தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகர். 1682 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்து பாலே பல்கலைக்கழகத்தில் படித்து லுாதரன் தேவலயத்தில் கிருத்துவ மதபோதகராக இவர் பணியாற்றினார். டென் மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவரும் கென்ரிக் என்பவரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் டச்சு காலனி வசம் இருந்த பகுதியில் மதபோதகராக பணிபுரிய கடந்த 1706 ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.

இங்கு அவரே ஒரு அச்சகத்தை நிறுவி அதில் தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாச்சாரம் மற்றும் மதம் சம்மந்தமான படிப்புகளை வெளியிட்டார். இவர் பைபிளின் "புதிய அத்தியாயத்தை” தமிழில் 1715 ஆம் ஆண்டு மொழி பெயர்த்தார். இவர் 1719 ஆம் ஆண்டு மறைந்தார். இந்த தமிழ் மொழிபெயர்ப்பான புதிய அத்தியாயம் மட்டுமல்லாது இரண்டு தேவாலயங்கள் மற்றும் ஒரு பிரார்த்தனை கூடத்தை கட்டியதோடு 250 க்கும் மேற்பட்ட கிருத்துவர்களுக்கு ஞானஸ்தானமும் வழங்கியுள்ளார்.

சீகன் பால்க் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட ஒரு அரிய வகை பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக அந்த சமயத்தில் வழங்கப்பட்டது. அந்த புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு தஞ்சை சரஸ்வதி மகால் நுாலகம் அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

விலைமதிப்பில்லாத இந்த பைபிளானது காணமல் போய்விட்டதாக கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் இந்த வழக்கானது கண்டுபிடிக்க இயலாத வழக்காக முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த புராதான பைபிள் களவுபோனது தொடர்பாக கடந்த 17.10.2017 ஆம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காணாமல் போன இந்த பைபிளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர். தனிப்படை போலீசாரின் விசாரணையில் பைபிள் காணமல் போன 10-10-2005 தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் 07.10.2005 அன்று அருங்காட்சியகத்திற்கு சில வெளிநாட்டினர் வந்து சென்றது தெரிய வந்தது. ஒரு குழுவாக வந்த இவர்கள் மதபோதகர் சீகன் பால்க் அவர்களின் நுாற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகளுக்காக இங்கே வருகை தந்ததும் சீகன் பால்க் சம்மந்தப்பட்ட இடங்களையும் தொண்டாற்றிய நிறுவனங்களையும் பார்வையிடுவதையும் நோக்கமாக கொண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

முதல் தமிழ் பைபிள்

மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படையினர் பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் வலைதளங்களை ஆராய்ச்சி செய்ததில் காணாமல் போன 17 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டிருந்த ஒரு அச்சகத்தில் அச்சிடப்பட்ட சரபோஜி மன்னரின் கையெழுத்தோடு கூடிய இந்த திருடப்பட்ட பைபிளானது கிங்ஸ் கலெக்ஷன் என்ற லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வலைதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

வலைதளத்தில் இருந்த பைபிள் சரஸ்வதி மகால் நுாலகம் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது தான் என உறுதி செய்யப்பட்டது.

Also see... சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்...

மேலும் இதனை யுனேஸ்கோ ஒப்பந்தத்தின் மூலமாக திரும்ப கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விலைமதிப்பு மிக்க இந்த பைபிள் எவ்வாறு வெளிநாட்டிற்கு சென்றது யார் அதனை எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Idol smuggling case