ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை..

சென்னையில் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை..

9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட ஐடி பெண் ஊழியர்

9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட ஐடி பெண் ஊழியர்

Chennai | சென்னை அருகே ஐடி பெண் ஊழியர் 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தங்கை வீட்டில் தங்கியிருந்தபோது தற்கொலை செய்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியிலிருந்து 33-வயதான ஐடி பெண் ஊழியர் மதுமொழி என்பவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுமொழி உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து தற்கொலை செய்து கொண்ட மதுமொழியின் தங்கையிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் மதுமொழிக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆவதாகவும், மதுமொழிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தாழம்பூரில் உள்ள தங்கை வீட்டில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்ததும், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து 9வது மாடியிலிருந்து கீழே குதித்த தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

  Also see... பழையாறு அருகே சிதறிக்கிடந்த எலும்புக்கூடுகள்... போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

  மேலும் மதுமொழி தற்கொலை செய்துகொண்டதற்கு குடும்ப பிரச்சனை காரணமா ?  இல்லை வேறு ஏதேனும் காரணமா ?  என்ற கோணத்தில் தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Commit suicide, Crime News, Engineer suicide