ஹோம் /நியூஸ் /சென்னை /

நெள் கொள்முதல்: விவசாயிகளுக்கு குறை இருந்தால் இந்த எண்ணை அழைக்கலாம் - அமைச்சர் சக்கரபாணி..!

நெள் கொள்முதல்: விவசாயிகளுக்கு குறை இருந்தால் இந்த எண்ணை அழைக்கலாம் - அமைச்சர் சக்கரபாணி..!

அமைச்சர் சக்கரபாணி

அமைச்சர் சக்கரபாணி

22% ஈரப்பதம் உள்ள நெல்லைக் கூட கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி உள்ளோம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai | Chennai [Madras]

  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருப்பதை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

  சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, முன்கூட்டியே மேட்டூர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியும் முன் கூடியே தொடங்கப்பட்டது. இதனால் செப்டம்பர் 1ம் தேதியே குறுவை நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது. 1436 நேரடி கொள்முதல் தொடங்கப்பட்டு 4.88 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

  மேலும், விவசாயிகள் காத்திருப்பதை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஞாயிறு கூட நேரடி கொள்முதல் நிலையங்கள் விடுப்பு கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். குறைகள் ஏதும் இருந்தால் விவசாயிகள் 18005993540 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறியுள்ளார்.

  இதையும் படிங்க | தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை தொடரும்.. 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - வானிலை மையம்

  22% ஈரப்பதம் உள்ள நெல்லைக் கூட கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி உள்ளோம். இதற்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்காக துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி செல்ல உள்ளார். சம்பா பயிர் சாகுபடியிலும் 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Minister