ஹோம் /நியூஸ் /சென்னை /

’பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தைப்போடு...’ - குதிரையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்திய கூல் சுரேஷ்..!

’பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தைப்போடு...’ - குதிரையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்திய கூல் சுரேஷ்..!

ரோகிணி தியேட்டரில் கூல் சுரேஷ்!

ரோகிணி தியேட்டரில் கூல் சுரேஷ்!

Chennai | தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு ரோகிணி கிளைகளுக்கு திரைப்படம் பார்க்க வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள சோழர்களின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அதிகாலையிலேயே வெளியானது. அதில் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.

  மதுரையைச் சேர்ந்த சமர்ப்பறை இசைக் குழுவினர் அருமையான தங்கள் வாத்தியங்கள் மூலம் இசையை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாக மூட்டினர். அதேபோல் வழக்கமாக கோயம்பேடு திரையரங்கிற்கு படத்தை பார்க்க வரும் கூல் சுரேஷ் இந்த முறை குதிரையில் வந்து வெந்து தணிந்தது காடு வி-எஸ்-க்கு வணக்கத்தை போடு என்ற பதாகையோடு வந்து ரசிகர்களை உற்சாக மூட்டினார்.

  Also see...பொன்னியின் செல்வன் குறித்து மணிரத்னம் பேட்டி

  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் கூறுகையில், “ பொன்னியின் செல்வன் ஒரு நாவல் கதை, புத்தக கதை என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு வந்திருப்பதாகவும் ஏற்கனவே இதை புத்தகத்தில் படித்துள்ளோம். அதை காட்சி படமாக நேரில் ரசிக்க இப்போது வந்திருப்பதாகவும் மகிழ்ச்சியாக கூறினர்.

  செய்தியாளர்: கண்ணியப்பன், அம்பத்தூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Ponniyin selvan, Theatre