ஹோம் /நியூஸ் /சென்னை /

பைக் சாகசம் செய்த அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் : பிரபல யூடியூபருக்கு நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை!

பைக் சாகசம் செய்த அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் : பிரபல யூடியூபருக்கு நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை!

விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கிய பைக் ரேசர்

விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கிய பைக் ரேசர்

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை அண்ணாசாலையில் கடந்த 8ஆம் தேதி இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ் (வயது 19) மற்றும் முகமது சைபான் ( 19 ) ஆகிய இருவரை பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர் ஹைதரபாத்தை சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய் என்பதும் பைக் சாகசங்களில் ஈடுபடும் இவருக்கு 14 ஆயிரம் பாலோயர்ஸ் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதும் தெரியவந்தது.

மேலும் பைக் சாகசத்தில் ஈடுபட பயன்படுத்தியது இவரது நண்பர் வாகனம் என்பது தெரியவந்ததையடுத்து வண்டி எண்ணை வைத்து ஹைதரபாத்தில் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை கைது செய்தனர்.

Also Read : பொய் வழக்கால் பெண் தற்கொலை.. திமுகவினரை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்

முக்கிய நபரான பினோய் மட்டும் தலைமறைவான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, திங்கட்கிழமை மட்டும், காலை 9.30மணி முதல் 10.30மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30மணி வரையிலும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிக்னலிலே போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரசுரங்கள் வழங்க வேண்டும் எனவும் செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 12 மணி வரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும் எனவும் அதேபோல மூன்று வாரங்களுக்கு பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நூதன தண்டனை வழங்கி பினோயிற்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று காலை 9.30மணி முதல் பினோய் அண்ணாசாலை தேனாம்பேட்டை சிக்னலில் சாலை பாதுகாப்பை மதிக்க வேண்டும், பைக் சாகசங்கள் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பலகையை வைத்துக்கொண்டு வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதேபோல அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஏற்கனவே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஒரு வாரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விபத்து பிரிவில் பணியாற்ற நூதன தண்டனையை நீதிபதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Published by:Raj Kumar
First published:

Tags: Bike race, Chennai, High court