முகப்பு /செய்தி /சென்னை / சொத்து கிடைக்காததால் ஆத்திரம்.. சகோதரி காரை திருடி சென்ற ஐடி ஊழியர் கைது

சொத்து கிடைக்காததால் ஆத்திரம்.. சகோதரி காரை திருடி சென்ற ஐடி ஊழியர் கைது

கார் திருட்டு

கார் திருட்டு

Crime News : சகோதரியை பழிவாங்குவதற்காக காரை திருடி சென்ற சகோதரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை  ஐடி ஊழியர் ஒருவர் குடும்ப சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் சொந்த சகோதரியின் காரை கடத்தி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர் சொந்தமாக தண்ணீர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தேன்மொழி காரை காணவில்லை என சிடலப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தேன்மொழி வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது தேன்மொழியின் சகோதரரான ஆதி நாராயணன் (வயது 26) காரை திருடி செல்வது தெரியவந்தது. ஆதி நாராயணன் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆதி நாராயணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஜமீன் ராயபேட்டையை சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நன்மங்கள் ஏரிகரை பகுதியில்  பதுக்கி வைக்கபட்டிருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

இத குறித்து ஆதிநாராயனனிடம் போலீசார் நடத்திய விசாரனையில், “ சொத்துகள் அனைத்தையும் தனது தந்தை கணேசன் சகோதிரியின் பேரில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். சகோதரியை பழிவாங்குவதற்காக காரை திருடி சென்றதாக ஒப்புகொண்டார். இதனையடுத்து ஆதினாராயனன் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: சுரேஷ் 

First published:

Tags: Car, Chennai, Tamil News, Theft