ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் கொள்ளை.. கோவாவில் அழகிகளுடன் உல்லாசம்.. பாவம் கழிக்க திருப்பதிக்கு ரூ.1 லட்சம் - சிக்கிய போலி வருமானவரித்துறை அதிகாரிகள்

சென்னையில் கொள்ளை.. கோவாவில் அழகிகளுடன் உல்லாசம்.. பாவம் கழிக்க திருப்பதிக்கு ரூ.1 லட்சம் - சிக்கிய போலி வருமானவரித்துறை அதிகாரிகள்

வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி வழிப்பறி செய்த கும்பல்

வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி வழிப்பறி செய்த கும்பல்

கொள்ளை அடித்த பணத்தை கோவா சென்று பல அழகிகளுடன் உல்லாசமாக இருந்தும் சூதாட்டம் விளையாடியது விசாரணையில் தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி ரூ.67 லட்ச கொள்ளை அடித்து சென்ற முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது 42). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் வேலை செய்யும் அலிகான் (வயது 25) மற்றும் சுபானி (வயது 250 ஆகிய இருவரும் கடந்த 16ஆம் தேதி குண்டூரில் இருந்து 67 லட்ச ரூபாய் பணத்துடன் சென்னை வந்துள்ளனர். சவுகார்பேட்டையில் ஆர்டர் செய்த நகை வாங்குவதற்காக பஸ் மூலம் மாதவரம் பஸ் நிலையத்தில் இறங்கி ஆட்டோ மூலம் கொடுங்கையூர் மீனம்பாக்கம் சாலை அருகே வந்துகொண்டிருந்தனர்.

அப்பொழுது ஒரு கும்பல் வழிமறித்து வருமான வரி அதிகாரிகள் என கூறி அலிகான் இடமிருந்த 67 லட்சம் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக  கொடுங்கையூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்

புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமை மூன்று தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில்  ஹைதராபாத்தைச் சேர்ந்த கார் டிரைவர் பகதுல வெங்கட நரசிம்மராவ் (வயது 31) என்பவரை கடந்த 22ஆம் தேதி கொடுங்கையூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 7 லட்சம் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளை   போலீசார்  தேடி வந்தனர். இந்நிலையில் வருமான வரி அதிகாரிகள் எனக் கூறி பணம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் நேற்று கொடுங்கையூர் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து 11,50,000 ரூபாய்  பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் குண்டூர் நகர குண்டா சந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சையத் அப்துல் பாஜி  (33) குண்டூர் ரங்கா ராம் நகரை சேர்ந்த முப்பாலா அஞ்சு பாபு  (41) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் சுபானி (32),ராஜ நிமி மகேஷ் (28 ) உள்ளிட்ட 4 பேரிடம் இருந்து 31, 90,000 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

இதனை தொடர்ந்து இந்த குற்ற சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய   துணை ஆணையர் ஈஸ்வரன்,

இந்த குற்றவாளி பிடிப்பதற்காக மூன்று தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர் என்றும் இந்த நகை கொள்ளை சம்பவம் திட்டமிட்டு இவர்கள் கொள்ளையடித்துள்ளனர் என கூறினர்.

பல நாட்களாக கூட்டு முயற்சி செய்து பலமுறை தோல்வி கண்டு தற்போது அவர்கள் கொள்ளை அடித்துள்ளன என தெரியவந்துள்ளது.

இந்த கும்பல் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாயை திருப்பதி கோவிலுக்கு சென்று உண்டியலில் போட்டு உள்ளனர்.பின்னர் கோவா சென்று பல அழகிகளுடன் உல்லாசமாக இருந்து மற்றும் சூதாட்டம் விளையாடியது விசாரணையில் தெரிய வந்ததாக துணை ஆணையர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

செய்தியாளர்: அசோக் குமார்

First published:

Tags: Chennai, Crime News