முகப்பு /செய்தி /சென்னை / தரகர் வைத்து ஆள்பிடிப்பு: லட்சக்கணக்கில் பணம் வசூல்- போலி டாக்டர் பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்

தரகர் வைத்து ஆள்பிடிப்பு: லட்சக்கணக்கில் பணம் வசூல்- போலி டாக்டர் பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்

வடிவேலுடன் ஹரிஷ்

வடிவேலுடன் ஹரிஷ்

போலியாக டாக்டர் பட்டம் வழங்குவதற்கு தரகர்கள் வைத்து பணம் வசூல் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையைச் சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, தொலைக்காட்சி பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலம் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கலந்து கொண்டு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். ஆனால் வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டங்கள் எனவும் தனியார் அமைப்பு வழங்கிய டாக்டர் பட்டத்திற்கு தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அண்ணா பல்கலைக்கழகம் குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல்நிலையத்திலும், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல்நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன. புகாரின் பேரில் நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குநரான ஹரிஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதனிடையே முன்ஜாமீன் கோரி ஹரிஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனை அடுத்து ஆம்பூரில் தலைமறைவாக இருந்த ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளியான இடைத்தரகர் கருப்பையா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும் இவர்களிடம் இருந்து போலி டாக்டர் பட்டம், போலி ஆவணங்கள் , 96 பதக்கங்கள், போலி முத்திரைகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

முதற்கட்டமாக விசாரணையில் பிடிபட்ட ஹரிஷ், போலியாக டாக்டர் பட்டம் கொடுத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. பணம் குடுத்தாவது பெயருக்கு பின்னால் டாக்டர் பட்டம் சேர்த்துவிட வேண்டும் என்று நினைத்தவர்கள்தான் ஹரிஷின் கையில் சிக்கிய ஆடுகள். ஆட்டுக்கு பேரம் பேசுவது போல 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை டாக்டர் பட்டங்களை விற்பனை செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக மாவட்டம் முழுக்க புரோக்கர்கள் மூலம் ஆட்களை பிடித்து சென்னையில் மூன்று இடங்களில் போலி டாக்டர் பட்டம் வழங்கி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். தற்போது மோசடியை பெரிய அளவில் கொண்டு செல்ல அண்ணா பல்கலைக்கழகத்தில் போலியாக நடந்த டாக்டர் பட்டம் நிகழ்வுக்கு 50 பேரிடம் வசூல் செய்து ஏமாற்றியுள்ளனர்.

தேவகோட்டை : தாய், மகள் கொலை வழக்கில் 55 நாட்களுக்கு பிறகு 3 பேர் கைது..!

அதற்காக திரைப்பிரபலங்கள் முதல் யூட்டியூப் பிரபலங்கள் வரை அவர்களுக்கே தெரியாமல் பிராண்ட் அம்பாஸ்டர்களாக பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில் கைதான ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News