முகப்பு /செய்தி /சென்னை / அரசு வேலைக்காக போலி சாதி சான்றிதழ்... நீதிமன்றம் கடும் காட்டம்..!

அரசு வேலைக்காக போலி சாதி சான்றிதழ்... நீதிமன்றம் கடும் காட்டம்..!

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

Reservation case | அரசு வேலைக்காக போலி சாதிச்சான்றிதழ் அளித்து இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

பாலசுந்தரம் என்பவர் பழங்குடியின வகுப்புக்கான சான்றிதழ் வழங்கி கோவை வன மரபியல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.  1999ஆம் ஆண்டு இளநிலை எழுத்தாளராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவரது சாதிச் சான்றிதழ் மாநில அளவிலான குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அதில் போலி என்பது தெரிய வந்ததையடுத்து, பாலசுந்தரத்தின் சாதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாலசுந்தரம் வழக்கு தொடர்ந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தனது சாதி சான்றிதழை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்தது ஏற்புடையதல்ல என்று மனுவில் கூறியிருந்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது பெருமைக்குரிய ஒன்று என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அரசு வேலைக்காக இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்கப்படாமல் விடக்கூடாது எனக் கூறி, அவரது சாதிச்சான்று ரத்து செய்த உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

First published:

Tags: Chennai, Chennai High court, Reservation