Home /News /chennai /

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை காண வந்த முன்னாள் உரிமையாளர்.. வரவேற்று உபசரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை காண வந்த முன்னாள் உரிமையாளர்.. வரவேற்று உபசரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோபாலபுரம் வீடு

கோபாலபுரம் வீடு

தனக்கு திருமணமான கோபாலபுரம் இல்லத்தை காண, அமெரிக்காவில் இருந்து திரும்பிய சரோஜா விரும்ப, அதனை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    தங்களது கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த, முன்னாள் உரிமையாளரை, முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் அன்புடன் உபசரித்தனர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டை சரபேஸ்வரர் என்பவரிடம், 1955-ம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கினார். வீட்டை விலைக்கு வாங்கி இருந்தாலும், சில மாதங்கள் கழித்து சரபேஸ்வரரின் பேத்தி சரோஜா திருமணத்தை கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திக்கொள்ள கருணாநிதி அனுமதி அளித்தார்.

    தனக்கு திருமணமான கோபாலபுரம் இல்லத்தை காண, அமெரிக்காவில் இருந்து திரும்பிய சரோஜா விரும்ப, அதனை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி,சரோஜாவும் அவரது குடும்பத்தினரும் கோபாலபுரம் இல்லத்திற்கு இன்று வர, அவர்களை முதலமைச்சரே வரவேற்று உபசரித்து, வீட்டையும் சுற்றி காட்டினார்.

    பழைய நினைவுகளில் சரோஜா மூழ்கினார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இட்டுள்ள பதிவில், வீடு என்பது பலரது கனவு! கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு.

    தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு. இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை திரு.சரபேஸ்வரர் அவர்களிடம் 1955ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார்.

    இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கைகள் என்ன?

    அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர். அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய திருமிகு. சரோஜா சீதாராமன் அவர்கள் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது” என்று  குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, DMK leader Karunanidhi

    அடுத்த செய்தி