ஹோம் /நியூஸ் /சென்னை /

”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை சந்தித்து ஆசி பெறுவோம்” - ஓ.பி.எஸ்

”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை சந்தித்து ஆசி பெறுவோம்” - ஓ.பி.எஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை சந்தித்து அவர்களுடைய ஆசியை பெறுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,

பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து நல்ல ஆலோசனைகளை பெற வந்ததாக கூறினார்.

மேலும், பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என கூறிய அவர், அதிமுக துவங்கப்பட்ட நோக்கம் குறித்தும், கட்சியின் கொள்கைகள் குறித்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுவது தனித்துவமாக உள்ளதாகவும், அதனை மக்கள் விரும்பி ரசித்து கொண்டு இருப்பதாக கூறினார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு,  ‘ பொறுத்திருந்து பாருங்கள் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் எம்ஜிஆருடன் இருந்தவர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுடைய ஆசியை பெறுவோம்’ என தெரிவித்தார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Deputy cm ops, O Panneerselvam, O Pannerselvam, OPS