வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளதாகவும், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டாலும் இலவச மின்சாரம் ரத்தாகாது எனவும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் மின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை , இனி வரக்கூடிய நாட்களிலும் பிரச்சனை இருக்காது என தெரிவித்தார்.
Also Read : கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு - உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு
மேலும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 36 மணி நேரத்தில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டதாக தெரிவித்த அவர், அங்கு பழுதான 44 மின்கம்பங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு விரைவாக பணிகள் செய்யப்பட்டது எனவும் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் வாரியத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார், அதில் 20,000 விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. 100 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என விளக்கினார்.
மேலும் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரவும் தகவலுக்கு பதிலளித்த அமைச்சர், ஆதார எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என விளக்கமளித்தார். மேலும், மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட, ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhar, Electricity, Electricity bill, Senthil Balaji