ஹோம் /நியூஸ் /சென்னை /

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு?

கமல்ஹாசன், இவிகேஎஸ் இளங்கோவன்

கமல்ஹாசன், இவிகேஎஸ் இளங்கோவன்

விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியதற்கும், திமுக அமைச்சர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருவதற்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மீது தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அது தங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை மற்றும் தோழமை கட்சிகளின் விருப்பத்தின் பேரில் தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிட்டார்.

இதனைதொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

இதனையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆதரவு கோரினார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ ஹசன் மவுலானா மற்றும் தங்கபாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில் ஏற்கனவே கமல்ஹாசன் பங்கேற்றிருந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்த சந்திப்பின் முடிவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல் நிச்சயம் ஆதரவு தருவார் என  நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும் கமல் அவரது கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகு ஆதரவு நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என தெரிவித்தார்.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency, EVKS Elangovan, Kamal Haasan