ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் கண்ணீர மல்க பேட்டியளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.
அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் பங்கேற்ற பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன். அப்போது, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எனக்கு கட்டாயமாக வேட்பாளராக போட்டியிட இடம் வேண்டும் என்று கேட்டுள்ளேன். தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் நான் என்னுடைய கோரிக்கையை அளித்துள்ளேன்" என தெரிவித்தார்.
மேலும், உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக இடம் அளிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் எனவும்தான் கட்சிக்காக நிறைய இழந்துள்ளேன் என கண் கலங்கினார்.
தொடர்ந்து பேசுகையில், ஈரோடு கிழக்கு என்னுடைய சொந்த தொகுதி. ஏற்கெனவே என்ஜிஓ மூலம் பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டுவருகிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன்.” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.