ஹோம் /நியூஸ் /சென்னை /

தேவர் தங்க கவச விவகாரம்.... நினைவிட அறங்காவலர் ஆதரவு கோர பசும்பொன் செல்லும் எடப்பாடி தரப்பு...

தேவர் தங்க கவச விவகாரம்.... நினைவிட அறங்காவலர் ஆதரவு கோர பசும்பொன் செல்லும் எடப்பாடி தரப்பு...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர், எடப்பாடி பழனிசாமி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர், எடப்பாடி பழனிசாமி

Devar Jayanthi gold shield | தேவர் தங்க கவச விவகாரம் தொடர்பாக நினைவிட அறங்காவலர் ஆதரவு கோர எடப்பாடி தரப்பினர் பசும்பொன் செல்கின்றனர். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தேவர் தங்க கவச விவகாரம் தொடர்பாக நினைவிட அறங்காவலர் ஆதரவு கோர எடப்பாடி தரப்பினர் பசும்பொன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது. அந்த நாளில் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார்கள்.

  கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கீரிடம் மற்றும் கவசத்தை வழங்கினார்.

  இதையும் படிங்க : மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு...

  சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசம் மதுரை பேங்க் ஆப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி நிகழ்வு வரும்போது அதிமுகவின் பொருளாளராக இருப்பவர் வங்கியிலிருந்து கவசத்தை எடுத்து கமுதியில் உள்ள தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கி, நிகழ்வு முடிந்த பின்னர் மீண்டும் வங்கியில் வைக்கப்படுவது வழக்கமான ஒன்று.

  இந்நிலையில், இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையின் தங்க கவசத்தை பெறுவதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம்  தரப்பு இடையே போட்டி நிலவும் சூழலில் இரு தரப்பும் தங்க கவசத்துக்கு உரிமை கோரி மதுரையில் கவசம் பாதுகாக்கப்பட்டு வரும் தனியார் வங்கியில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

  மேலும் கவசத்தை பெறுவதற்கு தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவின் ஒப்புதலும் அவசியம். அதனால் அவருடைய ஆதரவை பெறுவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகள் நாளை காலை பசும்பொன் செல்கின்றனர்.

  இதையும் படிங்க : ஒருதலை காதலால் வெறிச்செயல்.. பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை

  அங்கு நினைவிட அறங்காவலரை நேரில் சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், அவர் சம்மதித்தால் தங்க கவசத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அளிக்க வங்கி நிர்வாகம் முன்வரலாம் என கூறப்படுகிறது.

  Published by:Karthi K
  First published:

  Tags: ADMK, Chennai, Devar Jayanthi, EPS, OPS