ஹோம் /நியூஸ் /சென்னை /

எண்ணூர் மேம்பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரி..  ஓட்டுநர் பத்திரமாக மீட்பு

எண்ணூர் மேம்பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரி..  ஓட்டுநர் பத்திரமாக மீட்பு

மேம்பாலத்தில் தொடங்கி லாரியில் இருந்து ஓட்டுநரை மீட்கும் தீயணைப்புத்துறையினர்

மேம்பாலத்தில் தொடங்கி லாரியில் இருந்து ஓட்டுநரை மீட்கும் தீயணைப்புத்துறையினர்

Lorry Accident | ஒட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவற்றை தாண்டி  இஞ்சின் முன்பகுதியில் தலை குப்புற தொங்கிய படி நின்று கொண்டு இருந்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

எண்ணூர் மேம்பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்த  ஓட்டுநரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை எண்ணூர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ரகித்பாஷா நேற்று மதியம் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து  கண்டெய்னர் லாரியை ஓட்டி கொண்டு எண்ணூர்- கத்திவாக்கம் கொசஸ்த்தலை ஆற்றின் மேம்பாலம் வழியாக வந்த போது ஒட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவற்றை தாண்டி  இஞ்சின் முன்பகுதியில் தலைகுப்புற தொங்கியபடி நின்றுக்கொண்டிருந்தது.

இதைபார்த்த  அவ்வழியாக  சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து   தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து   அத்திப்பட்டு பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணி மூலம் லாரி ஒட்டுனர் ரகித்பாஷாவை மீட்டனர்.

First published:

Tags: Chennai