ஹோம் /நியூஸ் /சென்னை /

' பணம் கொடுத்தா கரண்ட் வரும்'.. புதிய மின் இணைப்புக்கு ரூ.10000 லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பொறியாளர்!

' பணம் கொடுத்தா கரண்ட் வரும்'.. புதிய மின் இணைப்புக்கு ரூ.10000 லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பொறியாளர்!

 புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட பொறியாளர் கைது

புதிய மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட பொறியாளர் கைது

சென்னையில் வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த விவேக் குமார், தனது தாயார் வீட்டிற்கு புதிதாக ஒரு முனை கூடுதல் மின் இணைப்பு வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்தார். இதையடுத்து, கடந்த 27-ம் தேதி முகப்பேர் மேற்கு மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளர் கோதண்டராமனை சந்தித்து, அவரிடம் உரிய ஆவணங்களை வழங்கினார். இருப்பினும், புதிய மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டது.

  இதுகுறித்து, கோதண்டராமனிடம் தொடர்பு கொண்ட போது, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான், புதிய இணைப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக, ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விவேக் குமார் புகார் கொடுத்தார். இதையடுத்து, அவர்கள் வழங்கிய அறிவுரையின் படி, நொளம்பூர் காவல் நிலையம் அருகே இளநிலை பொறியாளர் கோதண்டராமனை வரவழைத்து, அவரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விவேக் குமார் கொடுத்தார்.

  Also see... கனமழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

  அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கோதண்டராமனை கைது செய்தனர். இதையடுத்து, 9 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டு, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: கண்ணியப்பன், அம்பத்தூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Electricity