சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் கடந்த 40 ஆண்டுகளாக சுரேஷ் என்பவர் "மாயாராம்" பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் தனது கடையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ராஜேஷ் என்பவர் பணிபுரிந்து வந்ததாகவும் தங்களுக்கு தெரியாமல் போலி பில் மூலம் ரூ.45 லட்சம் வரை சிறுக சிறுக மோசடி செய்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பொருள்களில் டூத் பிரஷ் ஒன்றை மாற்றுவதற்காக பல்பொருள் அங்காடிக்கு நேரில் வந்துள்ளார். அப்போது பில்லை வாங்கி சோதனை செய்தபோது வாடிக்கையாளருக்கு கொடுத்த பில்லில் ரூபாய் 5,000 எனவும் பல்பொருள் அங்காடியில் உள்ள கணினியில் ரூபாய் 2,500 எனவும் குறிப்பிட்டு இருந்ததை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை செய்தபோது தனது பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்த ராஜேஷ் என்பவர் இரண்டு பில்களை உருவாக்கி, தவறாக கணக்கு காட்டி மோசடி செய்து செய்து வந்த விஷயம் சுரேஷுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்டபோது ரூ.5 லட்சம் பணத்தை மட்டுமே தான் மோசடி செய்ததாக கூறியுள்ளார். ராஜேஷ் வேலை செய்த எட்டு ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கை பார்த்தபோது சிறுகச்சிறுக ரூ.45 லட்ச ரூபாய் பணத்தை ராஜேஷ் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து தான் மோசடி செய்த மொத்த பணத்தையும் தருவதாக ராஜேஷ் பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார். பின் வீட்டுக்கு சென்ற ராஜேஷ் அதன்பிறகு தலைமறைவானார். இதன் பின்னரே தான் பல்பொருள் அங்காடி உரிமையாளரான சுரேஷ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கோயமுத்தூரில் தலைமறைவாக இருந்த ராஜேஷை நுங்கம்பாக்கம் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், "தனது தந்தை வேலை பார்த்த கடையில் சாதாரண ஊழியராக சேர்ந்த ராஜேஷ், நன்கு வேலை பார்த்து உரிமையாளர் சுரேஷுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்துக் கொண்டுள்ளார்.
Also Read: தமிழகத்தில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
அதனால், அனைத்து கணக்கு பொறுப்புகளையும் ராஜேஷிடம் ஒப்படைத்ததாகவும் அதை பயன்படுத்திக் கொண்டு சிறுக சிறுக போலி பில் தயாரித்து கொள்ளையடித்ததாகவும்" ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து சொந்த ஊரில் வீடு மற்றும் கார் என சொகுசாக வாழ்ந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மறைத்து ஏழைப் போல் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் தொடர்ந்து நடித்து பல லட்ச ரூபாய் கொள்ளை அடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து எவ்வளவு ரூபாய் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கொள்ளை அடித்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai