ஹோம் /நியூஸ் /சென்னை /

“நாங்கள் நல்லவர்கள்” - எல்பின் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஏஜெண்டுகள் கதறல்!

“நாங்கள் நல்லவர்கள்” - எல்பின் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஏஜெண்டுகள் கதறல்!

எல்பின் நிதி நிறுவன ஏஜெண்டுகள்

எல்பின் நிதி நிறுவன ஏஜெண்டுகள்

Elpin Company agents | ரூபாய் ஒரு லட்சம் பணம் கொடுத்தால் ரூ.10 ஆயிரத்திலிருந்து இருந்து ரூ.15 ஆயிரம் வரை மாதம் வட்டி தரப்படும் என்று கூறி மோசடி செய்தது எல்பின்-இ-காம் நிதி நிறுவனம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த Elpin-e-com private limited என்ற நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் புகார்கள் குவிந்தன.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் எல்வின் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 7000 நபர்களிடம் ரூ.6000 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து நிறுவன ஏஜெண்டுகள் 18 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அப்போது கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நிறுவன உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மோசடியில் ஈடுப்பட்டதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஏஜெண்டுகளில் சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்களை ரவுடிகள் சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : ரூ.12 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சி... ரவுடியை காரில் கடத்திய நகைக்கடை உரிமையாளர்...

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்த நபர்கள் பேசியபோது, “ஏஜெண்டுகளான நாங்கள் நல்லவர்கள். எங்களை நம்பி முதலீட்டாளர்கள் பணம் கொடுத்தது உண்மை.

நாங்கள் பணம் வாங்கியதும் உண்மை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணத்தினால் நிறுவனத்தினால் சரியான அளவில் வட்டி பணம் தர முடியவில்லை. இதற்குள் அவசரப்பட்டு சில முதலீட்டாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்” என தெரிவித்தனர்.

மேலும் தற்போது நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பதாக சொல்லி உள்ளனர். ஆனால், இடையில் சில ரவுடிகள் புகுந்து முதலீட்டாளர்களுக்கும் நிறுவன உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு ராஜா (எ) கோவிந்தராஜன், சிவகாசி ஜெயலெஷ்மி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணி பெரியசாமி திருப்பூரை சேர்ந்த ஈவன் பொன்ராஜ் ஆகிய நான்கு நபர்கள் நிறுவனத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், சில முதலீட்டார்களை தங்களுக்கெதிராக தூண்டிவிட்டு தங்கள் மீது புகார் கொடுக்க வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் நிலைதடுமாறிய வாகனம்... அமைச்சர், கலெக்டர் தப்பினர்... சினிமா காட்சிபோல் திக் திக் நிமிடங்கள்...

மேலும், தங்கள் மீது எந்தவிதமான தவறு இல்லை எனவும், ஆனால் காவல்துறை தங்களை சரியாக விசாரணை செய்யாமல் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். தாங்கள் இந்த நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக இருந்து பணம் சம்பாதித்தது உண்மைதான். ஆனால், மக்களை ஏமாற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்களை மிரட்டும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Chennai, Crime News