முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் மின்சார ரயில் சிக்னல் கோளாறு: தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் ஆங்காங்கே நிற்கும் ரயில்கள்.. பயணிகள் அவதி!

சென்னையில் மின்சார ரயில் சிக்னல் கோளாறு: தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் ஆங்காங்கே நிற்கும் ரயில்கள்.. பயணிகள் அவதி!

மின்சார ரயில்

மின்சார ரயில்

சிக்னல் கோளாறு காரணமாக  சைதாப்பேட்டை முதல் எழும்பூர் வரை ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சிக்னல் கோளாறு காரணமாக சென்னை தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் முக்கிய பொது போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை உள்ளது. குறிப்பாக தாம்பரம் முதல் சென்னை கடற்கரை இடையேயான பாதையில் இயக்கப்படும் ரயில் சேவையை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரயில் போக்குவரத்து சிக்னல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் குறித்த நேரத்துக்கு பணிகளுக்கு செல்ல முடியாமல் பயணிகளுக்கு அவதி அடைந்தனர்.

சிக்னல் கோளாறு காரணமாக  சைதாப்பேட்டை முதல் எழும்பூர் வரை ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது

First published:

Tags: Chennai local Train, Electric Train