முகப்பு /செய்தி /சென்னை / பழமைவாத கருத்துகளை கண்டுகொள்ளாமல் பெண்கள் படிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

பழமைவாத கருத்துகளை கண்டுகொள்ளாமல் பெண்கள் படிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

இன்றும் சிலர் பெண்களைப் படிக்க வெளியே அனுப்பக்கூடாது என முயற்சி செய்கின்றனர், மாணவிகள் கண்டுகொள்ளாமல் படிக்க வேண்டும் - ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பள்ளிக்கல்வியில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு விரைவில் முதலிடத்திற்கு முன்னேறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நூற்றாண்டு விழா மணிக்கூண்டைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, 2021-2022ஆம் ஆண்டில் முதலிடம் பெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கும், விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றும் சிலர் பெண்களைப் படிக்க வெளியே அனுப்பக்கூடாது என முயற்சி செய்கின்றனர் எனவும், அதுபோன்ற பழமைவாத கருத்துகளை மாணவிகள் கண்டுகொள்ளாமல் படிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பெண்களுக்கு நிச்சயமாகக் கல்வி வேண்டும் எனவும், கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து எனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சேவை மனப்பான்மையுடன் கல்வி வழங்கக் கல்வி நிறுவனங்கள் முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

First published:

Tags: CM MK Stalin, Education, Women's Rights