ஹோம் /நியூஸ் /சென்னை /

எம்.ஜி.ஆர். நினைவு தினம்.. மெரினாவில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

எம்.ஜி.ஆர். நினைவு தினம்.. மெரினாவில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

MGR Memorial day | மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை  மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் ஏராளமான அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 35ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க | வெளுத்து வாங்கப்போகுது கனமழை..! டெல்டா மாவட்ட மக்களே உஷார்..

தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிட நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மேடையிலே நினைவு நாளின் உறுதி மொழியானது ஏற்கப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Cm edapadi palanisami, EPS, Marina Beach, MGR