ஹோம் /நியூஸ் /சென்னை /

ஜெயலலிதா நினைவு தினம்: நினைவிடத்தில் தனித்தனியாக மரியாதை செலுத்திய ஓபிஎஸ் - ஈபிஎஸ் !

ஜெயலலிதா நினைவு தினம்: நினைவிடத்தில் தனித்தனியாக மரியாதை செலுத்திய ஓபிஎஸ் - ஈபிஎஸ் !

ஓபிஎஸ், ஈபிஎஸ்

ஓபிஎஸ், ஈபிஎஸ்

இதனையடுத்து 11 மணியளவில் ஓபிஎஸ் அணியினர், சேப்பாக்கத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பேரணியாக நினைவிடம் நோக்கி சென்று மரியாதை செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி ஏற்றார். அதில், "குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம். அதிமுக என்பது ஆயிரங்காலத்து பயிர். தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றி தழைத்து நிற்கும் ஆலமரம். இதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. அதிமுகவை கட்டிக்காப்போம். நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று வெற்றிக்கு சூளுரைப்போம். நாற்பதும் நமதே நாளையும் நமதே என்று சபதம் ஏற்போம். அதற்காக அயராது உழைப்போம்.

தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். புரட்சித் தலைவியின், புரட்சித் தலைவரின் பெரும்புகழையும் எந்நாளும் போற்றிடுவோம். வாழ்க அண்ணா புகழ். வளர்க்க எம்ஜிஆரின் பெரும்புகழ். ஓங்குக அம்மாவின் நெடும்புகழ். வெல்க வெல்க வெல்கவே. அஇஅதிமுக என்றும் வெல்க வெல்க வெல்கவே" என முழங்கினார்.

இதனையடுத்து 11 மணியளவில் ஓபிஎஸ் அணியினர், சேப்பாக்கத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பேரணியாக நினைவிடம் நோக்கி சென்று மரியாதை செலுத்தினர். அவருடன் வைத்திலிங்கம், மைத்ரேயன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

First published:

Tags: EPS, Jayalalitha, Jayalalithaa memorial, OPS