ஹோம் /நியூஸ் /சென்னை /

ரூ.30 ஆயிரம் கடனை திருப்பி கொடுக்க மறுத்த நண்பன் : ஆத்திரத்தில் அடித்தே கொன்ற இளைஞர்!

ரூ.30 ஆயிரம் கடனை திருப்பி கொடுக்க மறுத்த நண்பன் : ஆத்திரத்தில் அடித்தே கொன்ற இளைஞர்!

கொலை செய்யப்பட்ட அஜீஸ் மற்றும் கொலை செய்த ஸ்ரீதர்

கொலை செய்யப்பட்ட அஜீஸ் மற்றும் கொலை செய்த ஸ்ரீதர்

Duraipakkam Murder | கடன் வாங்கிய ரூ.30,000 திருப்பி தராததால் ஆத்திரத்தில் சிறுவயது நண்பரை தாக்கியதில் நண்பர் உயிரிழக்க, அடித்த நண்பர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கடனாக வாங்கிய ரூ. 30 ஆயிரத்தை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஆஜிஸ் என்பவர் அவருடைய சிறு வயது நண்பரான ஸ்ரீதர் என்பவரிடம் ரூ.30,000 பல மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி உள்ளார். கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் ஆஜீஸ் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி காணும் பொங்கல் அன்று ஸ்ரீதர் செல்லும் வழியில் ஆஜிஸ் மது அருந்திகொண்டு இருந்ததாகவும் அப்போது கொடுத்த பணத்தை ஸ்ரீதர் திருப்பி கேட்டபோது பணம் இல்லை என்று ஆஜிஸ் கூறியதாக கூறப்படுகிறது.

வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்று சொல்கிறாய்; ஆனால் தினந்தோறும் மது மட்டும் அருந்தி கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் ஆஜிஷை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் அப்போது மது போதையில் இருந்த ஆஜிஷ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து தலையில் வலி ஏற்பட்டதால் சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு 19ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சோதனை செய்துள்ளார். அப்போது ஆஜிஸ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,  தலையில் இரத்தம் கட்டி உள்ளதாகவும் கூறி பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஆஜிஷ் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முன்னதாக அடிதடி வழக்கு பதிவு செய்த போலீசார் ஆஜிஷ் உயிரிழந்த பின்பு அதை கொலை வழக்காக மாற்றி ஸ்ரீதரை கைது செய்த துரைப்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்:  ப.வினோத் கண்ணன்

First published:

Tags: Crime News, Local News