சென்னையில் நடைபெற்ற அம்மையார் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.
அதில், “இன்றைக்கு கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறேன். என்னை உறுப்பினராக்கியது சத்தியவாணி முத்துதான். நான் பட்டை போட்டுக்கொண்டு ஆத்திகனாக இருந்தேன். அப்போது என் ஆசிரியர் ஒருவர் நாத்திகத்தை அறிமுகப்படுத்தினார்.
அவரால் கொஞ்சம் மாறினேன். முழுமையாக மாறவில்லை. அப்போது எங்கள் கிராமத்தில் இருவர் கருப்பு சட்டை அணிந்ததற்காக அவர்கள் சட்டை கழற்றி கொழுத்தினார்கள். எங்கள் கிராமத்தில் காங்கிரஸ் கட்சிகாரர்கள் மட்டும்தான்.
அதை ஏன் என கேட்டதற்கு அவர்கள் திராவிடர் கட்சியினர் என சொன்னார்கள். அப்படியா அப்போ நான் திராவிட கட்சி ஆரம்பிக்கிறேன் என கூறினேன். அப்போது காட்பாடி வட்ட செயலாளரிடம் சென்று எங்கள் ஊரில் கிளை கழகம் ஆரம்பிக்க வேண்டும் என கேட்டேன். அதை தொடங்கி வைக்க அம்மையார் சத்தியவாணி முத்துதான் வந்தார்.
எங்கள் வீடுதான் கொஞ்சம் தங்கும் அளவிற்கு இருக்கும். அம்மையார் எங்கள் வீட்டில் தங்கினார். அவர் சாப்பிட்டுவிட்டு கூட்டத்தில் பேசிவிட்டு மீண்டும் சாப்பிட்டுவிட்டு சென்றார்.
மறுநாள் பக்கத்து காலணியில் இருந்து இருவர் வந்து, ‘எங்களுக்கு எப்ப சோறு போட போறீங்க’னு என் அப்பாவிடம் கேட்டனர். அவர் ஏன் என கேட்டதற்கு, நேற்று வந்த அம்மையார் எங்க சொந்தகாரங்க என சொன்னார்கள்.
ஏறு ஓட்டிகொண்டிருந்த என் தந்தை சாட்டையை கொண்டு என்னை அடித்து வெளுத்துவிட்டார். அப்போது என் தாயார்தான் என்னை காப்பாற்றினார். நான் முதல் முதலில் திமுகவில் சேர்ந்தது அம்மையார் சத்தியவாணி முத்து கையெழுத்திட்டுதான்.
அவர் கையெழுத்து போட்ட ராசி, நான் இன்னும் திமுகவில் இருக்கிறேன். அவர் வழிமாறி சென்றபோதும் என் மீது பாசமாக இருப்பார். என்னை சந்திக்கும்போது ‘உன் அப்பாட்ட அடிவாங்கிட்டு வந்த, இப்போ நல்ல இடத்தில் இருக்க’னு பாராட்டினார்கள். என் தாயை ஒற்ற அவர்கள் நிகழ்ச்சியில் பேசும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறி உரையை நிறைவு செய்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Durai murugan, Duraimurugan