ஹோம் /நியூஸ் /சென்னை /

தீவிரமடையும் மாண்டஸ் புயல்.. சென்னையில் கடல் கடும் சீற்றம்.. வெறிச்சோடிய மெரினா கடற்கரை!

தீவிரமடையும் மாண்டஸ் புயல்.. சென்னையில் கடல் கடும் சீற்றம்.. வெறிச்சோடிய மெரினா கடற்கரை!

மாதிரி படம்

மாதிரி படம்

Mandous cyclone | நாளை புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் இன்று சென்னையில் கடல் சீற்றம் அதிகளவில் காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க | மாண்டஸ் புயல் எதிரொலி... சென்னை மாநகராட்சி முக்கிய சுற்றறிக்கை

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்பட அனைத்து இடங்களிலும் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. பல அடி உயரத்துக்கு கடுமையான சீற்றங்கள் காணப்படுவதால், மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

புயலுக்கு பயந்து பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே கடலோர பகுதிகளில் காணப்படுவதால், அவர்களையும் போலீசார் வெளியேறுமாறு எச்சரிக்கின்றனர்.

First published:

Tags: Chennai, Cyclone Mandous, Heavy rain, Marina Beach, Weather News in Tamil