ஹோம் /நியூஸ் /சென்னை /

கனரக வாகனத்தில் சிக்கி போதை ஆசாமி உடல் நசுங்கி பலி... சாலையோரம் தூங்கியபோது நேர்ந்த சோகம்!

கனரக வாகனத்தில் சிக்கி போதை ஆசாமி உடல் நசுங்கி பலி... சாலையோரம் தூங்கியபோது நேர்ந்த சோகம்!

சிசிடிவியில் பதிவான விபத்து காட்சிகள்

சிசிடிவியில் பதிவான விபத்து காட்சிகள்

ECR Accident : சென்னை ஈசிஆர் சாலையில் மதுபோதையில் தள்ளாடியபடி சென்று கொண்டிருந்தவர் கனரக வாகனத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வீரா (எ) காண்டியப்பன்(40), இவர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.  தினந்தோறும் மது அருந்திவிட்டு சாலையோரம் உறங்கி வருவாராம். இந்நிலையில் இன்று அதிகாலை மதுபோதையில் ஒரு கடை முன்பு அமர்ந்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் எழுந்து நின்றபோது நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று வீரா மீது ஏறி இறங்கியது.

இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பம் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இச்சம்பவம் நடைபெற்ற அருகில் உள்ள கடையில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவானது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : வினோத் கண்ணன் - இசிஆர் 

First published:

Tags: Chennai, Crime News, Local News