ஹோம் /நியூஸ் /சென்னை /

ஹாரன் அடித்ததால் ரயில் மீது கல்வீசி தாக்கிய போதை ஆசாமி - வீடியோ வெளியாகி அதிர்ச்சி

ஹாரன் அடித்ததால் ரயில் மீது கல்வீசி தாக்கிய போதை ஆசாமி - வீடியோ வெளியாகி அதிர்ச்சி

சரக்கு ரயில் மீது கல்வீசி தாக்கிய போதை ஆசாமி

சரக்கு ரயில் மீது கல்வீசி தாக்கிய போதை ஆசாமி

சென்னையில் மதுபோதையில் இருந்த இளைஞர் சரக்கு ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னை கொருக்குப்பேட்டையிலிருந்து வியாசார்பாடி வழியாக செல்லக்கூடிய சரக்கு பெட்டக  ரயிலின் இஞ்சின் நேற்று மாலை அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்த மூவரை கண்டு ஓட்டுநர் ஒலிபெருக்கியை ஒலிக்க செய்துள்ளார்

  இதில்  மது போதையில் இருந்த ஒருவர் அங்கிருந்த கற்களை கொண்டு  ஓட்டுநரை தாக்கியுள்ளார். அந்த இளைஞரின் நண்பர்கள் தடுத்தும் கூட அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கற்களை கொண்டு நிற்கமுடியாமல் தள்ளாடியபடியே தாக்கியுள்ளார்.

  போதை ஆசாமி செய்யும் இந்த போதை அட்டூழிய செயலை ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார. மதுபோதையில் இருந்த இளைஞர் கற்கள் கொண்டு தாக்கியதில் ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநரின் கையில் வீக்கம் ஏற்படும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

  Also Read : ரஜினி குறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் கூறிய கருத்து தவறானது - அண்ணாமலை

  ஓட்டுநரை போதை ஆசாமி கற்களை கொண்டு தாக்கும் இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை மத்திய இரயில்வே பாதுகாப்பு படை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  செய்தியாளர் : அசோக்குமார், சென்னை

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai, Viral