ஹோம் /நியூஸ் /சென்னை /

“தினமும் குடிச்சிட்டுதான் வண்டி ஓட்றேன்..இன்னைக்கு ஏன் புடிக்கிறீங்க’ - சினிமா பெண் டான்சர் போலீசிடம் வாக்குவாதம்

“தினமும் குடிச்சிட்டுதான் வண்டி ஓட்றேன்..இன்னைக்கு ஏன் புடிக்கிறீங்க’ - சினிமா பெண் டான்சர் போலீசிடம் வாக்குவாதம்

சினிமா டான்சர்

சினிமா டான்சர்

Crime News : மதுபோதையில் சினிமா பெண் டான்சர் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

குடிபோதையில் பெண் ஒருவர் போக்குவரத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 31ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் தனது ஆண் நண்பருடன் வந்த பெண் ஒருவரை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் பிடித்துள்ளனர்.

அப்போது அந்த பெண் "தான் தினந்தோறும் குடித்துவிட்டு இதே சாலையில் தான் வருவதாகவும் அப்போதெல்லாம் போலீஸ் தன்னை பிடிக்கவில்லை இன்று மட்டும் ஏன் பிடித்துள்ளீர்கள்? என கோபமாக பேசி காவலர்களை அநாகரிகமான முறையில் திட்டியுள்ளார்."   இந்த  வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலீசார் விசாரணையில் அவர் வேளச்சேரியை சேர்ந்த மீனா என்பது தெரியவந்தது. இவர் கடந்த 31 ஆம் தேதி இரவு விருகம்பாக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்ட மது விருந்தில் கலந்து கொண்டு பின் அங்கிருந்து தனது ஆண் நண்பருடன் வேளச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது சைதாப்பேட்டை போக்குவரத்து போலீசாரிடம் வாகன தணிக்கையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

மேலும், போலீசார் சோதனையில் அவர் லைசன்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததற்காக ரூபாய் 10,000 மற்றும் லைசென்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டியதற்காக ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனம் போலீசாரல் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது வரை அவர் அபராதத் தொகையை கட்டாததால் இருசக்கர வாகனம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீசாரிடம் மது போதையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண் சினிமாவில் டான்சராக பணியாற்றி வருகிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சினிமா டான்சரான மீனாவை, போக்குவரத்து போலீசார் மது சோதனை எடுத்த போது மீனாவின் மது அளவு 189 ஆக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai, Cinema, Crime News, Driving License, Drunk an drive, New Year, Tamil News