ஹோம் /நியூஸ் /சென்னை /

உச்ச ரேட்டுக்குச் சென்ற முருங்கைக்காய்.. விலையைக் கேட்டால் தலையை சுற்றும்..!

உச்ச ரேட்டுக்குச் சென்ற முருங்கைக்காய்.. விலையைக் கேட்டால் தலையை சுற்றும்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Koyambedu market | மேலும் முருங்கைக்காய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

கோயம்பேட்டில் முருங்கைக்காய் கிலோ ஒரேநாளில் 80 ரூபாய் உயர்ந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று 1 கிலோ முருங்கைக்காய் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 80 ரூபாய் உயர்ந்து ரூ. 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது சீசன் இல்லாததாலும், வரத்து குறைந்துள்ளதாலும் முருங்கைக்காயின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

பச்சை நிறத்தில் வரும் மஹாராஷ்டிரா, மும்பை முருங்கைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 1 வாரமாக 80 ரூபாயிலிருந்த முருங்கைக்காயின் விலை சற்று அதிரடியாக உயர்ந்து இன்று 1 கிலோ முருங்கை ரூ. 180 முதல் ரூ. 200 வரை தரத்திற்கு ஏற்றவாறு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாடு வரும் தை மாதம் வரை நிலவும் எனவும், மேலும் முருங்கைக்காய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்

கோயம்பேடு காய்கறி சிறு மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் எஸ் எஸ் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்

First published:

Tags: Chennai, Drumstick Leaves, Koyambedu Market