ஹோம் /நியூஸ் /சென்னை /

வடகிழக்கு பருவமழை - சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம் தெரியுமா?

வடகிழக்கு பருவமழை - சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம் தெரியுமா?

ஏரிகளின் நிலவரம்

ஏரிகளின் நிலவரம்

Status of lakes | சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் இன்று காலை 10.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  வரும் 9ம் தேதி இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை, வெயில் என மாறி, மாறி வானிலை நிலவுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

  அந்த வகையில், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் இன்று காலை 10.00 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கத்தின் மொத்த கொள்ளளவு 24 அடியில், தற்போது 21.03 அடி இருக்கிறது. செம்பரம்பாக்கத்திற்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 539 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

  இதையும் படிங்க : மழைக்கு நேற்று ஒரேநாளில் 3 நபர்கள், 25 கால்நடைகள் பலி.. வடகிழக்கு பருவமழை அப்டேட்..

  இதேபோல், செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.80 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 373 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் ஏரிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Chennai rains, Lake