ஹோம் /நியூஸ் /சென்னை /

“மதங்களை பற்றி பேசுவது ஸ்டைல் ஆகிவிட்டது; சினிமாவுக்கு அது தேவையில்லை” - ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேச்சு

“மதங்களை பற்றி பேசுவது ஸ்டைல் ஆகிவிட்டது; சினிமாவுக்கு அது தேவையில்லை” - ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேச்சு

கனல் கண்ணன்

கனல் கண்ணன்

"யாராவது மதங்களை தவறாக சித்தரித்து படமெடுத்தால் அதில் பாதிக்கப்படுபவன் ஆங்கங்கே வளர்ந்து கொண்டு இருப்பான்"

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், மதங்களை தவறாக சித்தரித்து படம் எடுக்காதீர்கள் என பேசியுள்ளார்.

  சென்னையில் லோக்கல் சரக்கு படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.பி ராஜ்குமார், படத்தின் கதாநாயகர் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், இமான் அண்ணாச்சி, செண்ட்ராயன், தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியில் பங்கேற்று மேடையில் பேசிய கனல் கண்ணன், தயாரிப்பாளர்கள் படமெடுத்தால் தான் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு. நல்ல படம் இங்கே நன்றாக ஓடிக்கொண்டே தான் இருக்கிறது என பேசினார்.

  இதையும் வாசிக்க: சிதம்பரத்தில் பஸ்ஸ்டாப்பில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

  தொடர்ந்து பேசிய அவர், “மதங்களை பற்றி பேசுவது இப்போது ஒரு ஸ்டைல் ஆகிவிட்டது. அது சினிமாவுக்கு தேவை இல்லாதது. யாரும் மதங்களை தவறாக சித்தரித்து படம் எடுக்காதீர்கள். யாராவது மதங்களை தவறாக சித்தரித்து படமெடுத்தால் அதில் பாதிக்கப்படுபவன் ஆங்கங்கே வளர்ந்து கொண்டு இருப்பான்” என பேசினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Cinema, Kanal Kannan, Religion