Home /News /chennai /

கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த உதயநிதி

கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த உதயநிதி

உதயநிதி

உதயநிதி

karunanidhi birthday | சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி ஜூன் 3ஆம் தேதியான இன்று கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, தோட்டக்கலை துறை சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



    மலர் கண்காட்சியை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் ஜூன் ஐந்தாம் தேதி வரை நடக்கும் மலர் கண்காட்சியை காண பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறார்களுக்கு 20 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Birthday, DMK Karunanidhi, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி