ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆபாசமாக பேசிய வழக்கு : நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட திமுக பேச்சாளர்!

ஆபாசமாக பேசிய வழக்கு : நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட திமுக பேச்சாளர்!

சைதை சாதிக்

சைதை சாதிக்

பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பொதுக் கூட்டத்தில் ஆபாசமாக பேசியதாக சைதை சாதிக் மீது புகார் அளிக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு தொடரப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரிடம் மன்னிப்பு கோரி திமுக பேச்சாளர் சைதை சாதிக் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீஸார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் குறித்து மனுதாரர் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருப்பதால், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என, அவர் அந்த நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை சைதை சாதிக்கை கைது செய்யக்கூடாது என்றும் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

இதையும் படிக்க :  நாம் தமிழர் சார்பாக தேர்தலில் களமிறங்கும் சவுக்கு சங்கர்? - சீமான் பரபரப்பு பேட்டி

இந்நிலையில், சைதை சாதிக், பாஜக நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். பிரமாண பத்திரத்தை ஏற்ற நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன்பு ஒரு வார காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

First published:

Tags: BJP, Chennai High court, DMK, Madras High court