ஹோம் /நியூஸ் /சென்னை /

பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் - தி.மு.க தலைமை அதிரடி உத்தரவு

பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் - தி.மு.க தலைமை அதிரடி உத்தரவு

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

கடந்த 12ம் தேதி விருகம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் நீக்கம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி, திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநரை தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் சூழலில், அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே,  இது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன்,  “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கட்சி தலைமைக்கு புகார் வந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: DMK, DMK cadres