Home /News /chennai /

முதல்வரின் உழைப்பை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது - தழுதழுத்த குரலில் பேசிய மதுரவாயல் திமுக எம்.எல்.ஏ

முதல்வரின் உழைப்பை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது - தழுதழுத்த குரலில் பேசிய மதுரவாயல் திமுக எம்.எல்.ஏ

 மதுரவாயல்  சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி

மதுரவாயல்  சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி

Maduravoyal MLA Karapakkam Ganapathy : முதல்வரின் உழைப்பை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது. கண்ணீர் மல்க  தழுதழுத்த குரலில் பேசிய மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி.

    முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடுத்த  மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் தெரு முனை கூட்டம் நடைபெற்றது. இதில்  500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரவாயல்  சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, கவுன்சிலர்கள் செல்வகுமார், சண்முகம், ஹேமலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என  பொதுமக்கள் திரளாக  கலந்துகொண்டார்.

    அப்போது நிகழ்ச்சியில்  மேடையில் பேசிய எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, “  தமிழக முதல்வர்  ஓய்வின்றி உழைக்கும்  உழைப்பை பார்க்கும்போது எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது என்று தனது தழுதழுத்த குரலில் கண்ணில் கண்ணீர் நிரம்ப பேசினார்.

    மேலும் பொதுமக்கள் இனி வரும் காலங்களில் வெளியில் வரும் போது 500 ரூபாய்  பாக்கெட்டில் கொண்டு வர வேண்டும். மாஸ்க் இல்லையெனில் போலீஸ்க்கு அபராதம் செலத்த வேண்டும். அதனால் அனைவரும் மறக்காமல் முக கவசம் அணியுங்கள்”  என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்எல்ஏ மேடையில்  பேசினார்.

    Also see... கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு...

    செய்தியாளர்: சோமசுந்திரம், பூந்தமல்லி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: DMK, DMK Karunanidhi

    அடுத்த செய்தி