தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் உள்ளிட்டவைகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல்பாடுகள் குறித்து அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் 'அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் அனைத்து பெண்களையும் சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும்' என வலியுறுத்தினோம். pic.twitter.com/TZXawsXrMq
— Udhay (@Udhaystalin) December 19, 2022
பொங்கல் பண்டிகை : ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000... அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
தொடர்ந்து, அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்களை முழுவதுமாக சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Minister, Udhayanidhi Stalin