பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இல்லையே என்ற கேள்விக்கு மார்கெட், வயல்வெளி என எங்கும் கரும்பு இருக்கிறது என கிண்டலாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மூதறிஞர் ராஜாயின் 50 ஆம் ஆண்டு நினைவு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சருடன் சேர்ந்து அமைச்சர் துரைமுருகனும் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “விடுதலைப் போராட்ட காலத்தில் தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத மிகப் பெரும் தலைவராக திகழ்ந்தவர் ராஜாஜி. வட இந்தியா அளவுக்கு தென்னிந்தியாவில் தலைவர்கள் உருவாகாத காலம் அது.
தன் அறிவால் இந்தியாவில் தலைசிறந்த தலைவராக திகழ்ந்தவர். இந்தியை திணித்தவரும் அவர் தான். அதே இந்தித் திணிப்பை எதிர்த்தவரும் அவர்தான்.
காங்கிரஸ் தான் இந்தியாவை ஆள வேண்டும் என்றவரும் அவர்தான். காங்கிரசை எதிர்க்க தனி இயக்கம் தொடங்கியவரும் அவர்தான். இதற்காக அவர் மாற்றிப் மாற்றி பேசுகிறவர் என்ற அர்த்தமல்ல. தன் கருத்து தவறானது என்றாலும் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறும் மாறிக் கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தது.
காஷ்மீரையும், பாகிஸ்தானையும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றவர். அதனால் தான் அவரை தீர்க்கதரிசி என்கிறார்கள்.
அரசியல் மாறுபாடு இருந்தாலும் தலைவர்கள் குறித்து இது போன்ற புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லை என கூறி விவசாயிகள் சில இடங்களில் போராட்டம் நடத்துகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், கரும்பு மார்க்கெட்டில் இருக்கிறது, வயலில் இருக்கிறது, கரும்பு எங்கும் இருக்கிறது என பதிலளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Durai murugan, Pongal Gift