ஹோம் /நியூஸ் /சென்னை /

திமுக அரசு அதிகாரிகளை ஏவி விடுகிறது... எங்களுக்கும் ஆள் பலம் இருக்கிறது! - அண்ணாமலை பேட்டி

திமுக அரசு அதிகாரிகளை ஏவி விடுகிறது... எங்களுக்கும் ஆள் பலம் இருக்கிறது! - அண்ணாமலை பேட்டி

ஸ்டாலின், அண்ணாமலை

ஸ்டாலின், அண்ணாமலை

BJP Annamalai | சித்தாந்தத்தின் அடிப்படையில் பாஜகவிற்கு திமுக எதிரி. காங்கிரசில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மிகவும் மோசமாக உள்ளது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு பவள விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

  பின்னர் சென்னை தியாகராஜ நகரில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்திற்கு சென்று தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 84 நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

  இதனைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இரண்டு நாட்களாக தமிழகத்தில் நேற்று பிரதமர் மோடி, இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிந்தனர். இந்த பயணம் மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது.

  தமிழக மக்கள் கொடுத்த உற்சாகத்தை, வரவேற்பை பாஜக என்றைக்கும் மறக்காது.  நவம்பர் 16ம் தேதி ஆரம்பித்து டிசம்பர் 16ம் தேதி வரை காசி தமிழ் சங்கத்தின் விழாவை சிறப்பாக செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

  இதையும் படிங்க : தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடத்தை பாஜக நிரப்ப வேண்டும்: அமித்ஷா விருப்பம்!

  தமிழ் மக்களின் முதல் குழு காசி வரும்பொழுது வாரணாசியில் நின்று நான் வரவேற்பேன் என மோடி தெரிவித்தார். தமிழ் மக்களின் அற்புதமான கலாச்சாரம் பாரம்பரியம் என்னை வியக்க வைக்கிறது என மோடி தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு விளக்கினார்.

  தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றுவது தமிழர்களின் பங்கு மட்டுமல்ல, இந்தியர்களுடைய பங்கு. குறிப்பாக தாய் மொழியில் பயிற்றுவிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.  மருத்துவ கல்லூரியில் தமிழ் மொழியில் பாடங்களை கற்றுத்தர ஆரம்பிக்க வேண்டும்.

  எந்த தாய் மொழி மாணவர்களை அந்த உயரத்துக்கு கொண்டு போனதோ அதே அளவு அவர்கள் தம் தாய் மொழியில் படிக்கும்பொழுது மேலும் மேலும் வளர முடியும். கட்சி நண்பர்கள் எல்லா விஷயத்தையும் நாம் பெரிதுப்படுத்த தேவையில்லை.

  தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், குறிப்பாக இன்னும் நாம் இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பது பற்றி மட்டும் தான் நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறோம்.  நேற்று பிரதமருடன் ஒரு மணி நேரம் பேசினேன். தமிழ்நாட்டில் நாம் என்ன என்ன செய்து கொண்டிருக்கிறோம் என கேட்டறிந்தார்.

  இதையும் படிங்க : ராஜீவ் காந்தி கொலை வழக்கு தீர்ப்பு: ஏழு பேரை தூக்கிலிடக்கோரி காங்கிரஸ் நூதன போராட்டம்!

  காவல்துறையினர் நேற்று பாஜகவினரிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள். ஆளும் கட்சியினர் காவல்துறையை ஏவி விடுகிறார்கள். சில சமயத்தில் திமுக அரசு அதிகாரிகளை ஏவி விட்டாலும் கூட எங்களுக்கும் ஆள் பலம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பாஜக மீது அவதூறு பரப்புகின்றனர்.   பாஜகவிற்கு இது சவாலான காலம்.

  சித்தாந்தத்தின் அடிப்படையில் பாஜகவிற்கு திமுக எதிரி. தமிழ்நாட்டில் காங்கிரஸின் நிலைப்பாடு மிகவும் மோசமாக உள்ளது. அகில இந்திய அளவில் தலைவராக இருக்கக்கூடிய ராகுல் காந்தி நாங்கள் மன்னித்து விட்டோம் எனக் கூறினாலும், தமிழக காங்கிரஸ் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

  மத்தியில் ஆதரிப்போம். மாநிலத்தில் இதை எதிர்ப்போம் என்ற போக்கில் தமிழக காங்கிரஸ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எம்பி சீட் தரமாட்டோம் என திமுக மிரட்டியதையத்து காங்கிரஸ் தற்பொழுது நிலைபாட்டை மாற்றி இருக்கிறது.

  காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு நாளும் அகால பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.  பொருளாதாரத்தில் பின் தங்கியவர் அனைவருக்குமே இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு. இது பிராமணர்களுக்கு மட்டும் என திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. எத்தனை சமூகத்தில் இதேபோல் பின் தங்கியவர்கள் இருக்கிறார்கள் என்பதை பற்றி திமுக கவலைப்படுவதில்லை.

  கோயம்புத்தூர் குண்டு வெடிப்பை  மதப்பிரச்சனை வராமல் பாஜக மென்மையாக  கையாண்டது. தமிழ்நாட்டின் NIAவை இன்னும் பலப்படுத்த வேண்டும் என அமித்ஷாவுக்கு கோரிக்கை வைத்தோம்.

  இதையும் படிங்க : சவுக்கு சங்கர் மீது மேலும் 4 வழக்கு : 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

  தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் இடம் அனுமதி கேட்டு அவரை சந்தித்தார். அதேபோல் முன்னாள் துணை முதலமைச்சர் என்ற முறையில் ஓபிஎஸ் அவர்கள் அனுமதி பெற்று மோடியை வழி அனுப்பினார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தலைவர்கள் மாறினாலும் நாங்கள் கட்சியின் கூட்டணியில் தான் உள்ளோம்” என்றார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Amith shah, Annamalai, BJP, Chennai, PM Narendra Modi