ஹோம் /நியூஸ் /சென்னை /

’இனி இதில் தான் கையெழுத்திட வேண்டும்’ - திமுக பொதுக்குழுவில் முதல்வருக்கு அன்பு கட்டளையிட்ட துரைமுருகன்!

’இனி இதில் தான் கையெழுத்திட வேண்டும்’ - திமுக பொதுக்குழுவில் முதல்வருக்கு அன்பு கட்டளையிட்ட துரைமுருகன்!

துரைமுருகன், மு.க.ஸ்டாலின்

துரைமுருகன், மு.க.ஸ்டாலின்

DMK General Committee Meeting | திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இரண்டு 'ரேர் கலெக்‌ஷன்' மாண்ட் பிளாங்க் பேனாக்களை எடுத்து நேராக சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டைப்பையில் இருந்த ஒரு பேனாவை எடுத்து கீழே வைத்துவிட்டு, தனது பரிசான 2 பேனாக்களையும் அவரது சட்டைப்பையில் வைத்தார். இதை கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ந்து போனார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேலும் ஏற்கனவே ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது.

  இதையும் படிங்க: திமுகவின் கட்சி விதிகளில் திருத்தம்! பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதுதான்!

  இதில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதேபோல், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். மேலும் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

  இதையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். மேலும், கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும் இந்த பொதுக்குழுவில் ஏற்புரை ஆற்றினர்.

  அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது, “1962ம் ஆண்டு முதல் தத்தெடுப்பது போல என்னை தத்தெடுத்து பல பதவிகள் வழங்கியவர் கருணாநிதி. திமுகவின் 4வது பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த முதல்வருக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன். இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் யார் என்பதை தீர்மானித்தவர் கலைஞர் கருணாநிதி. அப்பாவை விட புகழ்பெற்று காட்டிய ராஜேந்திர சோழனை போன்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" இவ்வாறு அவர் பேசினார்.

  இதைதொடர்ந்து பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசி முடித்ததும், அதை எடுத்துட்டு வாங்க என உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார். உடனே அவர்கள் ஒரு பாக்ஸை கொண்டு வந்தனர். அந்த பாக்ஸை பிரித்த துரைமுருகன், இரண்டு 'ரேர் கலெக்‌ஷன்' மாண்ட் பிளாங்க் பேனாக்களை வெளியே எடுத்து நேராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சென்று, அவரது சட்டைப்பையில் இருந்த ஒரு பேனாவை எடுத்துக் கீழே வைத்துவிட்டு, தனது பரிசாக 2 பேனாக்களையும் சட்டைப்பையில் வைத்தார்.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டைப்பையில் இருந்த பேனாவை வேகமாக எடுத்து துரைமுருகன் கீழே வைத்ததும் ஸ்டாலினே அதிர்ந்து போனார். அவரது ரியாக்‌ஷனை பார்த்து பொதுக்குழுவில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து,  துரைமுருகன் “இதில் தான் அவர் இனி கையெழுத்திட வேண்டும். இந்த பேனாவில் தான் வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை அவர் வெளியிட வேண்டும்” என்று மேடையிலேயே கேட்டுக்கொண்டார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, CM MK Stalin, DMK, Durai murugan