முகப்பு /செய்தி /சென்னை / அறிவாலயத்துக்குள் அசைந்து வந்த ஒட்டகம்.. முதல்வருக்கு பர்த்டே கிஃப்ட்.. முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் சுவாரஸ்ய சம்பவம்!

அறிவாலயத்துக்குள் அசைந்து வந்த ஒட்டகம்.. முதல்வருக்கு பர்த்டே கிஃப்ட்.. முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் சுவாரஸ்ய சம்பவம்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒட்டகத்தை பரிசளித்த நிர்வாகி

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒட்டகத்தை பரிசளித்த நிர்வாகி

அண்ணா அறிவாலயத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் சுமார் 3 மணி நேரம் வரை முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

திருவண்ணாமலையை சேர்ந்த திமுக நிர்வாகி ஜாகிர் ஷா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக கொடி போர்த்திய ஒட்டகத்தை பரிசாக வழங்கினார்.

தனது 70வது பிறந்த நாளையொட்டி முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். முன்னதாக, அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவிடத்தில், மலர் தூவி மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி "முயற்சி. முயற்சி.. முயற்சி... அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அப்போது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முதலமைச்சருக்கு புத்தகத்தை பரிசாக கொடுத்து வாழ்த்து கூறினார்.

அதன்பின் சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், கோபாலபுரம் இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

அதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் சுமார் 3 மணி நேரம் வரை முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். திருவண்ணாமலையை சேர்ந்த திமுக நிர்வாகி ஜாகிர் ஷா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒட்டகத்தை பரிசாக வழங்கினார். திமுக கொடி போர்த்தப்பட்ட ஒட்டகத்தை முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இதேபோன்று மற்றொரு திமுக நிர்வாகி வெள்ளாடு ஒன்றை பரிசாக வழங்கினார்.

First published:

Tags: Birthday, CM MK Stalin, DMK, DMK cadres