ஹோம் /நியூஸ் /சென்னை /

திமுகவின் 7 மாவட்ட செயலாளர்களுக்கு கல்தா! புதிய மாவட்ட செயலாளர்கள் 7 பேர் தேர்வு...

திமுகவின் 7 மாவட்ட செயலாளர்களுக்கு கல்தா! புதிய மாவட்ட செயலாளர்கள் 7 பேர் தேர்வு...

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

Chennai | திமுகவில் கோவை உட்பட 7 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அமமுக மற்றும் ரஜினி மன்றத்தில் இருந்து வந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல்

1. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக மதியழகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (செங்குட்டுவன்)

இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆனவர்  மதியழகன்.

2.தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் - பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் (இன்பசேகரன்) இவர் அதிமுகவில் கடந்த 2011 முதல் 16 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அதன் பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை நிலைய செயலாளராக இருந்து அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் - மதுரா செந்தில் (மூர்த்தி)

இவர் திமுகவின் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.

4. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் - தளபதி முருகேசன்

நீண்ட நாள் திமுக நிர்வாகி கோவை கிழக்கு மாவட்டத்தின் சூலூர் தெற்கு பகுதி ஒன்றிய முன்னாள் பொறுப்பாளராக பொறுப்பு வகித்தவர்.

5.கோவை வடக்கு மாவட்ட செயலாளர் - தொண்டாமுத்தூர் ரவி

திமுகவின் நீண்ட கால நிர்வாகி, கோவை தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

6.தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் - அண்ணாத்துரை ( ஏனாதி பாலசுப்பிரமணியன்) பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

Also see... இன்றைய (29-09-2022) தலைப்பு செய்திகள் இதோ..!

7. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் - சந்திரன் (பூபதி)

திமுகவின் பல்வேறு நிலைகளை தாண்டி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார்.

தற்போதைய திருத்தணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: CM MK Stalin, DMK, Durai murugan