திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைபாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைபாடு என இருக்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தொண்டர்களை சந்தித்து கையசைத்தார் விஜயகாந்த்.
இதற்கு பிறகு பேசிய பிரேமலதா, தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை தொடர்ந்து வாக்கு பதிவு இயத்திரத்தின் ஆலோசனைகூட்டத்தில், தேமுதிக சார்பில் டெல்லியில் யார் கலந்துகொள்வார்கள் என்பதை தலைமை கழகம் பின்னர் அறிவிக்கும், உண்மையில் அது பயனளிப்பதாக இருந்தால் அதனை தேமுதிக ஆதரிக்கும் என தெரிவித்தார்.
மேலும், தேமுதிக பொருத்தவரை என்றைக்கும் கேப்டன் விஜயகாந்த் தான் தலைவர், யாருக்கு என்ன பதவி கொடுக்கிறார் என்பது செயற்குழு பொதுக்குழுவிற்கு பிறகுதான் தெரியும் என கூறிய அவர், பொங்கல் பண்டிகையை நம்பி தான் பல விவசாயிகள் கரும்பை விளைவித்து இருப்பார்கள். அனைவரது நிலைமையும் தெரிந்ததற்குப் பிறகு இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்காததையும் தொடக்கத்திலேயே கரும்பு கொள்முதல் செய்யாததையும் வன்மையாக கண்டிக்கிறோம். அதே சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு செயல்பாட்டையும் ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒரு செயல்பாட்டையும் முன்வைக்கும் திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடும் திமுக எடுத்துள்ளது. இது தான் திராவிட மாடலா என மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என விமர்சித்தார்.
தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக பல செயல் திட்டங்களை வைத்துள்ளோம். அவை அத்தனையும் செயற்குழு பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்றும் விஜயகாந்திற்கு பேசுவதிலும் நடப்பதிலும் மட்டுமே சிரமம் இருக்கிறது மற்றபடி தொண்டர்களை சந்திப்பதில் வரச்சொன்னது கேப்டன்தான். இது போன்ற முக்கிய நிகழ்வுகளில் நிச்சயம் கேப்டன் கலந்து கொள்வார். அவர் நலமாக உள்ளார் என தெரிவித்தார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு, 2024 தேர்தலில் எங்கள் கூட்டணி தொடர்பாக நிச்சயமாக தலைவருடைய நிலைப்பாடு என்ன என்பது அறிவிக்கப்படும் என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, DMDK, Premalatha Vijayakanth, Vijayakanth