ஹோம் /நியூஸ் /சென்னை /

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

பிரேமலதா பேட்டி

பிரேமலதா பேட்டி

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்தார்.

First published:

Tags: DMDK