ஹோம் /நியூஸ் /சென்னை /

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 1.51 லட்சம் பேர் முன்பதிவு..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 1.51 லட்சம் பேர் முன்பதிவு..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Chennai | சென்னை மாநகர காவல் துறை மற்றும் CMBT இணைந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வருபவர்களை  கண்காணிக் அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தபட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை கோயம்பேட்டிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் இணையதளம் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக 21.10.2022 முதல் 23.10.2022 வரை சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்காக இணையதளம் மற்றும் சிறப்பு கவுண்டர்கள் மூலம் டிக்கெட் புக்கிங் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் வெளியூர் செல்ல இணையதளம் மூலமாகவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்கள் மூலமாகவும் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துடன் 4,218 சிறப்பு பேருந்துகளோடு  3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தம் 10,518 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் அடுத்த 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,888 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

1. தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் - (திண்டிவனம் மார்க்கமாக) திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோயில்.

2.  தாம்பரம் சானிடேரியம் - கும்பகோணம், தஞ்சாவூர்.

3. கே.கே.நகர் பேருந்து நிலையம் -  (ECR மார்க்கமாக) புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.

4. மாதவரம் பேருந்து நிலையம் -  (செங்குன்றம் மார்க்கமாக) காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி.

5.  பூந்தமல்லி பணிமனை - காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி.

6. கோயம்பேடு பேருந்து நிலையம் - திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம், மயிலாடுதுறை.

Also see...திருப்பதி: ஏழுமலையான் கோவில் கட்டண சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

மேலும் அதிக பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருவதால் இங்கு CMBT சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் காவல் துறையினர் சிறப்பாக கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.  அதற்காக சிறப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டு பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அந்த மென்பொருளில் ஏற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

கொலை வழக்கு கொள்ளை வழக்கு வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரேனும் இந்த கோயம்பேடு பகுதிக்கு வந்தால் கண்டறியக்கூடிய வகையில் அந்த செயலியில் உள்ள மென்பொருள்  செயல்பட்டு வருகின்றன.

செய்தியாளர்: கன்னியப்பன், திருவள்ளுர்

First published:

Tags: Chennai, Diwali festival, Koyambedu