முகப்பு /செய்தி /சென்னை / அடுக்குமாடி குடியிருப்புகளில் இறந்தவர்களின் உடலை வைத்திருப்பதில் சிரமம்... சென்னை மாநகராட்சி சார்பில் பிணவறை அமைக்க முடிவு..!

அடுக்குமாடி குடியிருப்புகளில் இறந்தவர்களின் உடலை வைத்திருப்பதில் சிரமம்... சென்னை மாநகராட்சி சார்பில் பிணவறை அமைக்க முடிவு..!

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

Chennai News : அடுக்குமாடி குடியிருப்புகளில் இறந்தவர்களின் உடலை நீண்ட நேரம் வைத்திருப்பதில் சிரமம் ஏற்படுவதால் சென்னை மாநகராட்சி சார்பில் பிணவறை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை  அதிக அளவில் உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பர்களுக்கு, அங்கு செயல்பட்டு வரும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை விதிக்கிறது. இதில் குறிப்பாக,  அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏதாவது ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால், இறந்தவரின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க குடியிருப்போர் நலச் சங்கங்கள் அனுமதிப்பது இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் ஒருவர் இறந்துவிட்டால், அவரின் மகன், மகள் அல்லது உறவினர்கள் வரும் வரை உடலை வைத்திருந்து, அனைவரும் வந்த பின்னர் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வார்கள். சில நேரங்களில் 24 மணி நேரத்திற்கு மேல் கூட உடலை வீட்டில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில், குடியிருப்போர் நலச் சங்கங்கள் நீண்ட நேரம் உடலை வீட்டில் வைத்திருக்க அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் பிணவறை ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அண்ணா நகரில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் பிணவறை ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, ஒரே நேரத்தில் 8 முதல் 10 உடல்களை பாதுகாத்து வைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பிணவறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai, Local News