ஹோம் /நியூஸ் /சென்னை /

செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு... எழுத்தருக்கு ஷாக் கொடுத்த டிஜிபி சைலேந்திரபாபு

செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு... எழுத்தருக்கு ஷாக் கொடுத்த டிஜிபி சைலேந்திரபாபு

சைலேந்திர பாபு ஆய்வு

சைலேந்திர பாபு ஆய்வு

செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு , சரித்திர பதிவேடுகள், குற்றச்சம்மந்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவல் நிலையத்தை முறையாக பராமறித்து வைத்திருந்த எழுத்தர்க்கு ரூபாய் 5000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு மேற்கொண்ட டிஜிபி காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றச்சம்மந்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சமீபத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் என்னமாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளீர்கள் என்றெல்லாம் காவல் ஆய்வாளர்  நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.

இதையும் படிங்க: ''மெட்டல் டிடெக்டர் வேலை செய்யல.. பிரதமர் வந்தபோது பாதுகாப்பு குறைபாடு'' அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

இறுதியில் காவல் நிலையத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு இருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூபாய் 5000 வெகுமதி வழங்கினார். பின்னர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன் இருந்தனர்.

செய்தியாளர்: வினோத்குமார்- ஈசிஆர்

First published:

Tags: Police station, Sylendra Babu