ஹோம் /நியூஸ் /சென்னை /

தேவர் ஜெயந்தி : பசும்பொன் செல்வதை தவிர்த்த ஈபிஎஸ்... நந்தனத்தில் மரியாதை செலுத்துகிறார்

தேவர் ஜெயந்தி : பசும்பொன் செல்வதை தவிர்த்த ஈபிஎஸ்... நந்தனத்தில் மரியாதை செலுத்துகிறார்

 இபிஎஸ்

இபிஎஸ்

Eps | பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் 115வது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் 60வது குருபூஜை விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பசும்பொன்னில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என அறிவித்துள்ளார்.

  முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது. அந்த நாளில் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார்கள்.

  இதற்கிடையில், கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கீரிடம் மற்றும் கவசத்தை வழங்கினார். அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ தங்க கவசத்தை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தங்களிடம் தான் வழங்க வேண்டும் என்று  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இதையடுத்து, தேவர் தங்க கவச விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் வாதங்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் தங்க கவசத்தை  இரு தரப்பிடமும் தர மறுத்தது. மேலும், ராமநாதபுரம்  மாவட்ட வருவாய் அலுவலரிடம்  தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

  இதையும் படிங்க : தேவர் தங்க கவசத்தை டிஆர்ஓவிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு

  இந்நிலையில், முத்துராமலிங்க தேவரின் 115வது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் 60வது குருபூஜை விழாவில் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னுக்கு செல்லவில்லை என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

  அந்த அறிவிப்பில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்  முத்துராமலிங்க தேவரின்  நினைவிடத்தில் அதிமுக தலைமை செயலாளர்கள் , முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு, காமராஜ், மணியன், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, இசக்கி சுப்பையா, கீர்த்திகா முனியசாமி, முருகையா பாண்டியன், பாஸ்கரன், மணிகண்டன், முனியசாமி, தஞ்சை கணேசராஜா, செந்தில்நாதன், கிருஷ்ணமுரளி, ரவிச்சந்திரன், வைரமுத்து, குமார், முத்தையா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர், என அறிவித்திருந்தது. இதில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் பசும்பொன் செல்லவில்லை என தெரியவந்துள்ளது.

  மேலும், எடப்பாடி பழனிசாமி பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்லாமல் சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Devar Jayanthi, EPS