ஹோம் /நியூஸ் /சென்னை /

Cyclone Mandous : புயலிலும் மெட்ரோ ரயில் வழக்கம் போல் ஓடும்.. நிர்வாகம் தகவல்..

Cyclone Mandous : புயலிலும் மெட்ரோ ரயில் வழக்கம் போல் ஓடும்.. நிர்வாகம் தகவல்..

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Metro Trains : மாண்டஸ் புயல் வீசினாலும் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம்  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போதிலும், சென்னை ஏர்போர்ட் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும் இரு மார்க்கங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் மற்றும் பரங்கிமலையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும்.

மேலும், வழக்கமாக இரவு 11 மணி வரையிலும், அதிகாலை 5 மணி முதலும் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் நிலையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்

எனவே, மாண்டஸ் புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை எந்த காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Chennai metro, Cyclone Mandous