Home /News /chennai /

தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்..

போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்..

போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்..

50 லட்சம் பேர் தமிழ் நாட்டில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இளைய தலைமுறையினரை சீரழிப்பதாக கண்டன கோஷங்கள் எழுப்பினர். போதை பொருட்கள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர்.

    தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள்களின் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    எதிர்காலத் தமிழகத்தின் தூண்களான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறார்கள். பள்ளிக் கூட வாசல்களில், போதைப் பொருள்கள் கிடைக்கிறது. கைக்கு எட்டிய போதைப் பொருளால், மாணவச் சமூகம் அழிகிறது. போதைப் பழக்கக் கேட்டில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளால் தமிழ்நாடு சுடுகாடாக மாறுகிறது. 50 லட்சம் பேர் தமிழ் நாட்டில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். போதை வணிகத்தைத் தடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.



    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பாமகவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைகளில் பதாதைகள் ஏந்தி கண்டன கோஷமிட்டனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Anbumani ramadoss

    அடுத்த செய்தி